Thursday, November 30, 2017

புன்னகை

அறிமுகத்தின் அடிப்படை
ஆழ்மனதின் அடையாளம்
பொன்நகை பொறாமை தரும்
புன்னகை ஆனந்தம் தரும்
பரிமாறிக் கொண்டால்
பன்மடங்கு ஆகிவிடும்

- சு.க.சு

நட்பு

அன்னைக்கும் மேலே,
ஆறுதல் கூறி,
இன்முகம் காட்டி,
ஈருயிர் ஓருயிராய் ஆக்கி
உயிரில் உணர்வில் கலந்து
ஊரெங்கும் சுற்றி திரிந்து
என் நட்பென்று பெருமை பேசி
ஏக்கமும் பகிர்ந்து
ஐயங்கள் தகர்த்து
ஒரு கூட்டு கிளியாக
ஓராயிரம் ஆண்டு வாழ்ந்து
ஔடதம் பேசும் உன்னத உறவு நட்பு!

- சு.க.சு