Tuesday, July 14, 2020

68ம் பிறந்த நாள் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு 68 வரிகளில் வாழ்த்துக்கவிதை...

68ம் பிறந்த நாள் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு 68 வரிகளில் வாழ்த்துக்கவிதை...

வடுகப்பட்டி வார்த்தெடுத்த வைரமே
அங்கம்மாள் பெற்றெடுத்த முத்தே

கல்லூரி படிப்பு பச்சையப்பா
கலக்கல் பாடல்கள் படையப்பா

கள்ளிக்காட்டு இதிகாச கவியே
கருவாச்சி காவிய காவலனே

தண்ணீர் தேசம் தருவித்தவரே
தலைவராம் கலைஞரின் தம்பியே

வைகறை மேகங்களில் தொடங்கியது
தமிழ் ஆற்றுப்படையோடு நில்லாது

தொடரட்டும் உங்களது படைப்பு
சேரட்டும் தமிழுக்கு சிறப்பு

நாற்பதாண்டு கலையுலக பயணம்
நற்பாடல்கள் பலருக்கும் மனனம்

மதனும் கபிலனும் பிள்ளைகள்
மடையில்லா கவிக்கேது எல்லைகள்

இசைஞானி உடன்சேர்ந்து படைத்தவை
இமயமாய் உயரத்தில் சிறந்தவை

இசைப்புயல் கைகோர்த்து செதுக்கியவை
இதயத்தில் கற்கண்டாய் சுவைப்பவை

செந்நிற புழுதிதனில் வளர்ந்தவர்
வெண்ணிற ஆடைகளை அணிபவர்

நிழல்களில் துவங்கிய நிஜம்நீர்
ரோஜாவில் துளிர்த்திட்ட மணம்நீர்

விருதுகள் அணிவகுத்து தோள்சேர
பட்டங்கள் தொடர்ந்திங்கு புகழ்சேர

முத்தமிழ் அறிஞர் வழிநிற்க
முதல் மரியாதை உமைசேரும்

வானமகள் உமைப்பார்த்து நாணுகிறாள்
உம்கானமது எமக்கென்றும் போதிமரம்

காதல் கோவிலில் தொழுகை
கேட்கும் போதெல்லாம் உவகை

சங்கீத ஜாதிமுல்லை சந்தோஷம்
பொத்திவச்ச மல்லிகைமொட்டு உற்சாகம்

வானத்தை வரிகளில் வடித்தவரே
நிலவினை கைகளில் பிடித்தவரே

தஞ்சாவூர் மண்ணெடுத்த சிற்பியே
தலைமுறை தாண்டிநிற்கும் திறமையே

திருத்தி எழுதிய தீர்ப்புகள்
தீராது உங்கள் கற்பனைகள்

மௌனத்தின் சப்தங்கள் பலமானவை
கவிராஜன் கதையோ கணமானவை

பெய்யெனப் பெய்த மழையால்
எம்மெய் நனைந்தது மெய்யே

சின்னச்சின்ன ஆசைகள் படைத்தவரே
எனதாசை நேரிலும்மை காண்பதுவே

அர்த்தத்தின் அர்த்தத்தை சொன்னவரே
ஆழ்மனதைத் திருடிக் கொண்டவரே

மொழிப் பெயர்ப்பில் முனைந்தவரே
மொழி ஆளுமையில் திகழ்ந்தவரே

கலைஞானி நட்புகொண்ட இயல்ஞானியே
கவித்தாயின் ஆசிகொண்ட மகன்நீரே

அண்ணாமலையில் துவங்கிய முதற்பாடல்
அருணாலச்சலத்திற்கு தொடரும் திரைப்பாடல்

அதிசயத்தை அழகாக வர்ணித்தவரே
பொன்மணியை ஆத்மார்த்தமாய் நேசித்தவரே

வார்த்தை வரக்காத்திருக்கும் கவிநான்
ஞாலத்தை வார்த்தெடுக்கும் கவிநீர்

இரகசிய ஸ்நேகிதம் அலைபாயுதே
என்றென்றும் புன்னகை இழையொடுதே

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
மேலோகம் வாழ்த்தட்டும் உம்மை

பிறந்தநாள் கவிபடைத்த நெஞ்சம்
பிழைபொறுத்து ஆசிர்வதிக்க கெஞ்சும்

தாய்த்தமிழ் உள்ளவரை பேர்வாழ்க
மூவுலகும் பரவிஉம் புகழ்வாழ்க

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தரணியிலே வாழவேண்டும் நூறாண்டு

- கோ. சுதாகரன்
9380801009
sudhagkaran@gmail.com