Thursday, January 20, 2022

 (17.01.1963 to 17.01.2022) 60 அகவை தொடங்கும் உடன் பிறந்த மூத்த சகோதரன் திரு. விவேகானந்தன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கவிதை

- படைத்தவர் சு.க.சு.

உடன் பிறப்பே ! உடன் பிறப்பே !

பிறந்த நாள் வாழ்த்துகள் உடன் பிறப்பே !

தொடங்கியது வயது அறுபது !

உன்னுடைய மனதோ முப்பது !

நீ பேச தொடங்கினால் நிறுத்துவது கடினம் !

உன் பாசம் புரிந்தால் உனை பிரிவது கடினம் !

ஆன்மீக உலகத்தில் அசகாய சூரன் நீர் !

ஆனந்தம் அளிக்கின்ற வற்றாத ஊற்று நீர் !

உறவுகள் வேண்டுமென விரும்புகின்ற உள்ளம் உனது !

மரியாதை எதிர்பாரா மலர்போன்ற நெஞ்சம் உனது !

பக்திதனை பழரசமாய் பருகும் பாந்தமும் உனது !

சக்திகளை பாசமுடன் பார்க்கும் பரிவும் உனது !

வாரிசு பெற்றநீர் ! வளமுடன் வாழ்வீர் நீர் !

பாரிசு சென்றுவர வாழ்த்துகிறேன் தமயன் நான் !

பணியாற்றி  பணியாற்றி உழைப்பை ஊருக்கு கொடுத்திட்டீர் !

உண்மையாய் இருந்திங்கு பணப்பெட்டி காலியாய் இருக்கின்றீர் !

மாமனார் மதிப்பளித்து மனதார வாழ்த்திய மருமகன் !

மச்சான் பாசத்தோடு நடாத்திய நேசமிகு மைத்துனன் !

உடன்பிறந்த மூவரையும் எப்போதும் எகிறுகின்ற சகோதரனே !

உளமார பேசாமல் உடனடியாய் உருகுகின்ற உடன்பிறப்பே !

அம்சலதா தாரமாய் பெற்றவரே ! சக்திசொல் கேட்பாயாக !

சம்சாரம் சொல்கேட்டு சாதித்தவர் இவ்வுலகில் ஏராளம் !

அவ்வரிசை நின்றிங்கு அளவில்லா மகிழ்வுற்று வாழ்வீராக !

அடியேனின் வாழ்த்தும் அதையே பறைசாற்றி வருதிங்கே !

பாசமிகு பெருந்தகையே ! நேசமிகு பண்பாளனே !

உளமார பழகுபனே ! உள்ளொன்று இல்லாதவனே !

படிப்பில் மேல்நிலை இல்லாமல் வாழ்பவனும் நீயே !

பலருக்கும் படிப்பினை போதித்து வருபவனும் நீயே !

வாழ்த்த வயதில்லை என்றுசொல்லி ஒதுங்கநான் விரும்பவில்லை !

இதயப் பூர்வமாய் வாழ்த்துகிறேன் ! இமயமாய் வாழ்ந்திட வேண்டுமய்யா நீர் !

- சு.க.சு

Sunday, August 2, 2020

நட்பு தின கவிதை

நட்பு ( நட்பு தினம் - 2வது ஆகஸ்ட் 2020 )


இன்பத்தில் இணையாக ஆகும் நட்பு

துன்பத்தில் துணையாக நிற்கும் நட்பு


உறவுக்கும் மேலாக உயிராகும் நட்பு

உணர்வினை மதித்து உருகிடும் நட்பு


வேற்றுமை இருந்தாலும் வேராகும் நட்பு

ஒற்றுமை இருந்தாலோ ஓங்கிடும் நட்பு


விடயங்கள் பலவற்றை உரையாடும் நட்பு

விஷமங்கள் குறுக்கிட்டால் வேரறுக்கும் நட்பு


பரவசத்தை எப்போதும் பரிசாக்கும் நட்பு

பனித்துளிக்கு மேலானது தூய்மையான நட்பு


  • சு.க.சு (சுவை கவி சுதா)

Tuesday, July 14, 2020

68ம் பிறந்த நாள் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு 68 வரிகளில் வாழ்த்துக்கவிதை...

68ம் பிறந்த நாள் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு 68 வரிகளில் வாழ்த்துக்கவிதை...

வடுகப்பட்டி வார்த்தெடுத்த வைரமே
அங்கம்மாள் பெற்றெடுத்த முத்தே

கல்லூரி படிப்பு பச்சையப்பா
கலக்கல் பாடல்கள் படையப்பா

கள்ளிக்காட்டு இதிகாச கவியே
கருவாச்சி காவிய காவலனே

தண்ணீர் தேசம் தருவித்தவரே
தலைவராம் கலைஞரின் தம்பியே

வைகறை மேகங்களில் தொடங்கியது
தமிழ் ஆற்றுப்படையோடு நில்லாது

தொடரட்டும் உங்களது படைப்பு
சேரட்டும் தமிழுக்கு சிறப்பு

நாற்பதாண்டு கலையுலக பயணம்
நற்பாடல்கள் பலருக்கும் மனனம்

மதனும் கபிலனும் பிள்ளைகள்
மடையில்லா கவிக்கேது எல்லைகள்

இசைஞானி உடன்சேர்ந்து படைத்தவை
இமயமாய் உயரத்தில் சிறந்தவை

இசைப்புயல் கைகோர்த்து செதுக்கியவை
இதயத்தில் கற்கண்டாய் சுவைப்பவை

செந்நிற புழுதிதனில் வளர்ந்தவர்
வெண்ணிற ஆடைகளை அணிபவர்

நிழல்களில் துவங்கிய நிஜம்நீர்
ரோஜாவில் துளிர்த்திட்ட மணம்நீர்

விருதுகள் அணிவகுத்து தோள்சேர
பட்டங்கள் தொடர்ந்திங்கு புகழ்சேர

முத்தமிழ் அறிஞர் வழிநிற்க
முதல் மரியாதை உமைசேரும்

வானமகள் உமைப்பார்த்து நாணுகிறாள்
உம்கானமது எமக்கென்றும் போதிமரம்

காதல் கோவிலில் தொழுகை
கேட்கும் போதெல்லாம் உவகை

சங்கீத ஜாதிமுல்லை சந்தோஷம்
பொத்திவச்ச மல்லிகைமொட்டு உற்சாகம்

வானத்தை வரிகளில் வடித்தவரே
நிலவினை கைகளில் பிடித்தவரே

தஞ்சாவூர் மண்ணெடுத்த சிற்பியே
தலைமுறை தாண்டிநிற்கும் திறமையே

திருத்தி எழுதிய தீர்ப்புகள்
தீராது உங்கள் கற்பனைகள்

மௌனத்தின் சப்தங்கள் பலமானவை
கவிராஜன் கதையோ கணமானவை

பெய்யெனப் பெய்த மழையால்
எம்மெய் நனைந்தது மெய்யே

சின்னச்சின்ன ஆசைகள் படைத்தவரே
எனதாசை நேரிலும்மை காண்பதுவே

அர்த்தத்தின் அர்த்தத்தை சொன்னவரே
ஆழ்மனதைத் திருடிக் கொண்டவரே

மொழிப் பெயர்ப்பில் முனைந்தவரே
மொழி ஆளுமையில் திகழ்ந்தவரே

கலைஞானி நட்புகொண்ட இயல்ஞானியே
கவித்தாயின் ஆசிகொண்ட மகன்நீரே

அண்ணாமலையில் துவங்கிய முதற்பாடல்
அருணாலச்சலத்திற்கு தொடரும் திரைப்பாடல்

அதிசயத்தை அழகாக வர்ணித்தவரே
பொன்மணியை ஆத்மார்த்தமாய் நேசித்தவரே

வார்த்தை வரக்காத்திருக்கும் கவிநான்
ஞாலத்தை வார்த்தெடுக்கும் கவிநீர்

இரகசிய ஸ்நேகிதம் அலைபாயுதே
என்றென்றும் புன்னகை இழையொடுதே

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
மேலோகம் வாழ்த்தட்டும் உம்மை

பிறந்தநாள் கவிபடைத்த நெஞ்சம்
பிழைபொறுத்து ஆசிர்வதிக்க கெஞ்சும்

தாய்த்தமிழ் உள்ளவரை பேர்வாழ்க
மூவுலகும் பரவிஉம் புகழ்வாழ்க

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தரணியிலே வாழவேண்டும் நூறாண்டு

- கோ. சுதாகரன்
9380801009
sudhagkaran@gmail.com

Sunday, December 3, 2017

எது பெரியது?

எது பெரியது?

ஆன்மீகமா?
அறிவியலா?

மரணத்தை
வெல்லும் ஒருவர்
இப்பூவுலகில்
பிறக்கும் வரை
 ஆன்மீகமே
பெரியது

அப்படியொருவர்
பிறந்த பிறகோ
அல்லது
அப்படியொருவரை
அறிவியல்
கண்டுபிடித்த பிறகு
அறிவியலை
ஆன்மீகத்தோடு
ஒப்பீடு செய்யலாம்

அது வரை
ஆன்மீகத்தை
ஆதரிப்போம்
ஆராதிப்போம்

சு.க.சு.

Thursday, November 30, 2017

புன்னகை

அறிமுகத்தின் அடிப்படை
ஆழ்மனதின் அடையாளம்
பொன்நகை பொறாமை தரும்
புன்னகை ஆனந்தம் தரும்
பரிமாறிக் கொண்டால்
பன்மடங்கு ஆகிவிடும்

- சு.க.சு

நட்பு

அன்னைக்கும் மேலே,
ஆறுதல் கூறி,
இன்முகம் காட்டி,
ஈருயிர் ஓருயிராய் ஆக்கி
உயிரில் உணர்வில் கலந்து
ஊரெங்கும் சுற்றி திரிந்து
என் நட்பென்று பெருமை பேசி
ஏக்கமும் பகிர்ந்து
ஐயங்கள் தகர்த்து
ஒரு கூட்டு கிளியாக
ஓராயிரம் ஆண்டு வாழ்ந்து
ஔடதம் பேசும் உன்னத உறவு நட்பு!

- சு.க.சு

Friday, August 18, 2017

தமிழ் தேவதை

துக்கம் தொலைப்பதும் அவளாலே..
தூக்கம் மறப்பதும் அவளாலே..
அமைதி பெறுவதும் அவளாலே..
ஆனந்தம் அடைவதும் அவளாலே..
கண்ணீர் மலர்ந்ததும் அவளாலே..
கவலைகள் மறந்ததும் அவளாலே..
அவள் இதயம் பறிக்கும் சராசரி பெண்ணல்ல..
இதயத் துடிப்பாய் இருக்கும் தமிழ் எனும் தேவதை..

 - சு.க.சு.